யாழ்ப்பாணத்தில் இளம் ஆசிரியை மீது தாக்குதல்

யாழில் ஆசிரியை ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். அராலி வள்ளியம்மை வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் இளம் ஆசிரியை ஒருவரே தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளார். குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.