மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

இலங்கையில் அசாதாரண சூழ்நிலை காணப்பட்டாலும், திட்டமிட்டபடி அனைத்து பரீட்சைகளும் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான கபொத உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெறும் என ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

ஐந்தாமாண்டுக்கான புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி இடம்பெறும். இதேவேளை, டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கபொத சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.