தினப்பலன் மே 15- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்

மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.