காஞ்சனா 3 வெற்றிக்கு பின் ராகவா லாரன்ஸ் செய்த பெருமையான செயல்! குவியும் பாராட்டுகள்

நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமா, நடிப்பு, நடனம் போக சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவது பலரும் அறிந்த ஒன்று. நீண்ட நாட்களாக இருதய கோளாறால் அவதி படும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி வருகிறார்.

மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த முதியவர்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறினார். இந்நிலையில் தற்போது முதியவர் கணேசன் என்பவருக்கு வீடு கட்டு கொடுத்து கிரகப்பிரவேசம் செய்துள்ளார்.

அத்துடன் அண்மையில் அவரின் நடிப்பில் வந்த காஞ்சனா 3 படத்தின் வெற்றியால் தற்போது அவரின் ஒவ்வொரு படங்கள் வெளியீட்டிற்கு பின் 15 நாட்கள் சேவை செய்யவுள்ளவாராம். அவரை காண முடியாதவர்களை நேரில் சென்று தானே சந்திக்கவுள்ளதாகவும் குழந்தைகளின் படிப்பிற்காக உதவுவதாகவும் கூறியுள்ளார்.